fbpx

‘டிகிரி’ முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு.! ரூ.1,80,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை துறைமுகத்தில் துணை செயலாளர் பதவியில் பணியாற்றுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை துறைமுகம் அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 9 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.60,000 முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க சிறப்பு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை 06.03.2024 தேதிக்குள் செயலாளர், சென்னை துறைமுக ஆணையம், ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய cennaiport.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

ஷாக்...! மதுபானங்களின் மீதான கலால் வரி ரூ.10 வரை உயர்வு...! 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்...

Tue Jan 30 , 2024
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட […]

You May Like