fbpx

பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!! – இரயில்வே காவல்துறை எச்சரிக்கை!!

ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார்.

பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பொது இடங்களில் பேருந்துகளில் ரயில்களில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ள ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ரமேஷ் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

படியில் தொங்கி செல்வது, செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பது, ரயில் பெட்டி மீது ஏறுவது, வந்துகொண்டிருக்கும் ரயில் முன்பு நின்று ‘செல்ஃபி’ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே மாணவர்கள் தேவையற்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Chennai Railway Police DSP Ramesh has warned that if the college students engage in continuous violence in trains, railway stations and public places, they will be punished with imprisonment of up to 2 years.

Next Post

சோகம்!. பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் காலமானார்!

Tue Jul 9 , 2024
Usha Uthup's Husband Jani Chacko Uthup Dies at 78 After Cardiac Arrest

You May Like