அடுத்த ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங் தலைவர் விஸ்வநாதன் இது தொடர்பாக கூறியதாவது,’’கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங் அணியில் தோனி விளையாடாதது ஒரு துரதிர்ஷ்டம். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணி கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு விருந்தாக்கும். இந்த முறை தோனிதான் சூப்பர் கிங் கிரிக்கெட் அணியின் கேப்டன்.’’என தெரிவித்தார்.
இதனிடையே டி20 உலக கோப்பை 2021 தொடரில் மகேந்திர சிங் தோனியை ஆலோசகராக நியமித்ததை போல அவரை டி20 அணிக்கு முழு நேர ஆலோசகராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாகவும் கவல்கள் வெளியாகி உள்ளது.பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு நாள், டெஸ்ட் அணியை மட்டும் கவனிக்க முடியும். வேலைப்பளுவும் குறையும்.
இந்த யோசனையை கேப்டன் ரோகித் ஷர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகிய 3 பேரும் பி.சி.சி.ஐ.இடம் வைத்ததாகவும் இது நல்ல திட்டம் என பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், ஐ.பிஎல் 16வது சீசனுக்கு பின்னர் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று டி20 அணியில் இயக்குனராக செயல்படுவதும் உறுதியாகி உள்ளது.பயிற்சியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். வீரர்களுக்கு பயிற்சி அளித்தாலும் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு இல்லை. டெஸ்ட், டி20 என அடுத்தடுத்து தொடர்கள் நடப்பதால், பயிற்சியாளர்களால் சிறப்பான முறையில் வீரர்களை கவனிக்க முடியவில்லை என பி.சி.சி.ஐ. கருதுகின்றது.