சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் சென்ற மாதம் 26-ம் தேதியிலிருந்து புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அபராத தொகையானது பல மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாகராஜன் என்ற போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டி ஒருவரிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அபராதம் விதிக்கும் அதிகாரம் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்க்கு மட்டுமே உள்ளது.
அத்துடன், அபராதம் விதிக்கும் நேரத்தில் கட்டாயம் பாடி ஒன் கேமரா என்ற செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.