fbpx

சென்னை – மும்பை மோதல்!… சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடக்கம்!… ரசிகர்கள் உற்சாகம்!

சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை – மும்பை அணிகள் மோதும் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.

இந்தநிலையில், எல்-கிளாசிகோ எனும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் மே 6-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டு, ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க கொட்டும் மழையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள்.

Kokila

Next Post

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்!... தரவரிசையில் மீண்டும் இந்தியா No.1!... ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடியது!

Thu May 4 , 2023
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா. அதன்படி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 25 போட்டிகள், 3,031 புள்ளிகள், 121 ரேட்டிங் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 116 ரேட்டிங்களுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 114 ரேட்டிங்களுடன் இங்கிலாந்து 3ம் […]

You May Like