fbpx

Chess World Cup 2023 | சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்..

அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று இன்று நடைபெற்றது. கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்ற டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கர் இரண்டாவது சுற்றில் போராடி தோல்வி அடைந்தார் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தியதால் மகுடம் சூடினார் கார்ல்சன். வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார்.

Kathir

Next Post

"இவ்ளோ தூரம் வந்ததே பெரிய சாதனை தான்" பிரக்ஞானந்தாவுடன் வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்…

Fri Aug 25 , 2023
அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதிப் […]

You May Like