சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், திருமணத்தை காரணம் காட்டி பல ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஜாஞ்ச்கிர் சம்பா எம்எல்ஏவுமான நாராயண் சண்டேலின் மகனான பலாஸ் சண்டேல் மீது புதன்கிழமை கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜீரோ எஃப்ஐஆர் ஆக பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ஜாஞ்ச்கிர் சம்பா காவல்துறைக்கு மாற்றப்பட்டது” என்று மஹிலா தானா காவல் நிலையத்தின் அதிகாரி கவிதா துர்வே தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். பெண்னை கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளதாக கவிதா துர்வே கூறியுள்ளார்.