சத்தீஸ்கர் அரசாங்கம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தத் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையை மாநில அரசு வழங்கும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.
வேலையில்லா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் சத்தீஸ்கரை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ள, வேலையில்லாத இளைஞர்களுக்கு, மாதந்தோறும், 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
கூடுதலாக, சத்தீஸ்கரின் ஏதேனும் ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும், மேலும் விண்ணப்பித்த ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வேலைவாய்ப்பு பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.