சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களே அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ வாசிகள் பலரும் இறைச்சி கடைக்கு படையெடுத்துள்ளனர். இதில் சிக்கன் வாங்க வேண்டும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள் பலரும் சிக்கன் விலையை கேட்டு ஷாக் ஆகியுள்ளனர்.
நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.98க்கு விற்பனை ஆன நிலையில், இன்று ரூ.2 விலை உயர்ந்துள்ளது. முட்டை ரூ.5.05க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ சிக்கன் ரூ.210க்கும், வெள்ளை கோழி முட்டை ரூ.5.50க்கும், நாட்டு கோழி முட்டை ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more : தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி.. சீக்கிரமே வெயிட் குறையும்..!! செமல்ல