fbpx

’முதல்வர் எங்களை ஏமாற்றிவிட்டார்’..!! போராட்டத்தில் குதித்த ஜாக்டோ-ஜியோ..!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், செய்யவில்லை. ஒரே ஒரு போராட்டத்தில் எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்காது என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு 2 ஆண்டு காலம் அவகாசம் கொடுப்போம். அவகாசம் கொடுத்த பின்பும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் தான், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

கடந்த அரசில் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை பத்தாண்டு காலம் போராடி இருக்கிறோம். எடப்பாடியின் ஆட்சியில் எட்டாவது வருடம் தான் போராடினோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றுகிறார். அந்த ஏமாற்றம்தான் கொதிப்புதான் இன்றைக்கு கொதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தினுடைய முதல்வர் இதுவரைக்கும் பழைய பென்ஷன் சரண்டர் பண்ணுவதை வாயே திறக்கவில்லை.

எங்களுக்கு ஏமாற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கிறது. இரண்டு விதமாக பார்க்கிறோம். அதிகார வர்க்கத்தினுடைய போக்கு வேற மாதிரி இருக்கு. முதல்வர் ஸ்டாலினுடைய போக்கு வேற மாதிரி இருக்கு. இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கக்கூடிய பிரச்சனை தான் எங்களுடைய போராட்டம். எனவே, இந்த போராட்டத்தினுடைய முடிவுக்கு உள்ளதாகவே கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கையோடு தான் நாங்கள் இருக்கிறோம். நவம்பர் 15 முதல் 24 வரை அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்களுடன் சந்திப்பு, பிரச்சார இயக்கம் நடத்தப்படும். மாவட்ட தலைநகரில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Chella

Next Post

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளில் பிக்பாஸ் விக்ரமன் மீது வழக்குப்பதிவு..!! அதிர்ச்சியில் விசிக..!!

Mon Oct 30 , 2023
விசிக கட்சி நிர்வாகியாக பணியாற்றி வரும் விக்ரமன், கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். அசீம் முதலிடம் பிடித்த நிலையில், விக்ரமன் 2ஆம் இடம் பிடித்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அசீமும், விக்ரமனும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டது அந்த சீசனை மேலும் விறுவிறுப்பாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் […]

You May Like