fbpx

காலை உணவு திட்டம் : ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு செல்ல கூடாது..!! – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசினார்.

அப்போது பேசிய அவர், “மிக, மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். பெற்றோரின் பாசத்தோடு நான் உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத்திட்டம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது.

பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரப்பிரசாதம்.

காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. மக்கள் நலத்திட்டங்களை பார்த்து, பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. நமது அரசு ஒருநாளாவது செயல்படாமல் இருந்திருக்கிறதா?. நாள்தோறும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜன்டா பலிக்காது.

மாணவர்கள் படிப்பதற்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம். தமிழக மாணவர்கள் கல்வி பயில எந்த ரூபத்தில் தடை வந்தாலும், அதை தமிழக அரசு உடைக்கும். பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ அது எந்த தடையாக இருந்தாலும் தகர்ப்போம். ஒன்றிய பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி இப்போது நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது.

ஆனால், அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?. இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழகம் நீட் தேர்வை எதிர்த்தபோது முதலில் கேள்வி எழுப்பியர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் யாரும் திருட முடியாத சொத்து என்றார்.

Read more | Viral | இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தமா? ஹெட் மசாஜ் 20% டிஸ்கவுண்ட்!! – அழகு நிலையத்தின் விநோத அறிவிப்பு

English Summary

Chief Minister M.K.Stalin said that no matter how much the government spends, not a single child should come to school hungry.

Next Post

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா?  ஒரு கைப்பிடி "இந்த" பொருள் மட்டும் போதும்... 48 நாட்களில் நினைச்சது நிறைவேறும்..

Mon Jul 15 , 2024
kadan - super parigaram - salt makes more solutions

You May Like