தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வருக்கு அவ்வபோது வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று காலை (ஜனவரி 24) 7.15 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த அவர், 9.30 மணியளவில் வெளியேறினார்.
மருத்துவமனையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, அவர் அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் மருத்துவ பரிசோதனையொட்டி, மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.