fbpx

கேரளா செல்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..! என்ன காரணம் தெரியுமா?

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று கேரள செல்கிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், மாநில எல்லையோர விவகாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களின் தீர்வுக்காக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

கேரளா செல்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..! என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் முக.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். காலை 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதலமைச்சரை கேரள திமுக அமைப்பு செயலளார் முருகேசன் தலைமையில் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை பிற்பகலில் சந்திக்கிறார். அப்போது, முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார். மேலும் இரு தலைவர்களும் பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி, நெய்யாறு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்ககின்றன.

Chella

Next Post

Breaking : அதிமுக பொதுக்குழு வழக்கில் தனிநீதிபதி உத்தரவு ரத்து.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

Fri Sep 2 , 2022
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி […]
’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

You May Like