தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கூட 2, 3 நாட்கள் காய்ச்சல் காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று காலை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.