fbpx

குட் நியூஸ்: மதிய உணவுத் திட்டம்..!! கூடுதல் நிதி ரூ.4,114 கோடி வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்.!

தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகளும் கல்வி பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குழந்தைகள் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல நடந்துள்ளனர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் பசியை போக்குவதோடு அவர்கள் கல்வியை பெறுவதற்கும் இந்த திட்டம் பல வகைகளில் உதவுகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்திற்கான செலவீன தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தால் தமிழகம் முழுவதும் 2 முதல் 6 வயதுள்ள 11.50 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும் தொகையில் 2.39 ரூபாய் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து மதிய உணவு திட்டத்திற்காக கூடுதலாக 4,114 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Post

சென்னை: கலைகளின் "திருவிழா" இளைஞர்களின் கைவண்ணத்தில்..! கவனம் ஈர்த்த 'பித்தா' குழுவின் படைப்புகள்.!

Wed Jan 31 , 2024
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ‘திருவிழா சென்னை’ என்ற பெயரில் கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. லாப நோக்கமில்லாமல் கலையை பிரதானப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த கண்காட்சி சென்னை மனம் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி பிப்ரவரி 2-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இளம் தலைமுறையினர் பலரும் தங்களது கலை படைப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக பல்வேறு வேலைப்பாடுகள் இந்த கண்காட்சியில் இடம் […]

You May Like