fbpx

முடிவுக்கு வந்த முதல்வர் பஞ்சாயத்து..!! நள்ளிரவில் அழைப்பு விடுத்த ஆளுநர்..!! பதவியேற்கும் சம்பாய் சோரன்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த அமலாக்கத்துறை, 10 முறை சம்மன் அனுப்பியபோதும், ஹேமந்த் சோரன் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையே, நேற்று முன்தினம் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவர் கைதானால் அவரது மனைவி முதல்வராவார் என பேசப்பட்டு வந்த நிலையில், அவருக்குப் பதிலாக சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று காலை சம்பாய் சோரன் ஜார்கண்ட் ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் பட்டியலையும், அதற்கான வீடியோவையும் அவர் சமர்ப்பித்தார்.

இருப்பினும், இரவு வரை ஜார்க்கண்ட் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. அதனால், அங்கு பெரும் குழப்பம் நிலவியது. ஆளும் கட்சி தனது எம்எல்ஏக்களை காப்பாற்றுவதற்காக அவர்களை வெளிமாநிலத்திற்கு அழைத்துச் சென்று ரிசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்தது. இந்தச் சூழலில் தான் நேற்று நள்ளிரவில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். சம்பாய் சோரன் ஆட்சியமைக்க நேற்று காலை உரிமை கோரிய நிலையில், சுமார் 12 மணி நேரம் கழித்து அவரை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்.

இது ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை ஓரளவு தெளிவாக்கும் எனக் கருதப்படுகிறது. ஆளுநரின் அழைப்பை அடுத்து இன்று சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது. அடுத்து 10 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

பரபரப்பு...! திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் NIA சோதனை...!

Fri Feb 2 , 2024
திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு நிதி வாங்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

You May Like