fbpx

பெரும் சோகம்…! நீலகிரி கோர விபத்து… 2 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த .முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்றுமுதல் மாறப்போகும் நிதி மாற்றங்கள்!… என்னென்ன தெரியுமா?

Sun Oct 1 , 2023
சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு முதல் அக்டோபர் மாதத்தில் நிகழும் இந்த முக்கியமான மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சில விதிகள் நேற்றுடன் (செப்டம்பர் 30) முடிவடைந்து விட்டது. அதேபோன்று, புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இவை பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொருவரையும் பாதிக்கும். இந்த பதிவில் அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். புதிய விதிகள் இன்றுமுதல் (அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள், […]

You May Like