திமுக துணை பொதுச்செயலாளர் பதவில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு மோசமான விளக்கத்தை கொடுத்திருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வரிசையில் பொன்முடியின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு அதிரடி நடவடிக்கையும் எடுத்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் பதவில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 99% சொத்துக்களை உலக நலத்துக்காக தானம் செய்த பில் கேட்ஸ்.. பிள்ளைகளுக்கு வெறும் 1% தான்..!!