குறுவை சாகுபடிக்காக எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற ஆறுகள் மற்றும் சிறு,குறு வாய்க்கால்களின் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீர்வளத் துறையின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகின்றார். இன்று காலை 9 மணி அளவில் தஞ்சையை அடுத்துள்ள ஆயக்குடிக்கு சென்ற முதல்வர் முதலை முத்துவாரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல வின் மங்கலத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளார் அதன் பிறகு திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், செங்கரையூரில் நடக்கும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
பின்னர் வெள்ளனூரில் நந்தியார் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு அதன் பிறகு விமான மூலமாக இன்று இரவு சென்னைக்கு திரும்புகிறார்.