fbpx

வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கான முக்கிய காரணம் என்ன….? முதலமைச்சர் வெளியிட்ட விளக்கம் இதுதான்…..!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார் .அதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்வதாகவும் வெளிநாட்டு பயணத்தின் போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Next Post

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!! செலவுகளை எப்படி குறைப்பது..? பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!!

Tue May 23 , 2023
குழந்தைகள் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான செலவுகளோ பெரியதாகவே இருக்கிறது. ஆரோக்கியமான முறையில் வளர்ப்பது தொடங்கி, அவர்களுக்கு தேவையான ஆடைகள், சுகாதாரப் பொருட்கள் என செலவுகள் அணிவகுத்து நிற்கும். அதே சமயம், குழந்தைகளுக்கான செலவுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், செலவுகளை திட்டமிட்டு செய்தால் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம். அதற்கு கீழ்காணும் யோசனைகள் உதவிகரமாக இருக்கும். முன்கூட்டியே பட்ஜெட் ஒதுக்கவும் :  கர்ப்ப காலத்தின்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் சமயத்திலேயே, […]

You May Like