fbpx

தமிழகம் எதிர்பார்த்த ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று மீண்டும் தாக்கல்…!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

கடந்த 8-ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 9-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

மக்களே..‌! ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்க 2024 மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு...! எப்படி இணைப்பது...?

Thu Mar 23 , 2023
ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் […]

You May Like