சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் கடந்த 9 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். மேலும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அவர் சந்தித்தார்.
அப்போது அங்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த நிலையில் 9 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பானில் இருந்து இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.