fbpx

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..‌.! ஓ.பி.எஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்..‌.!

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சி வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டின் உடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய மக்களின் நலனை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக நேரில் சென்று மருத்துவம் பயில முடியாத நிலையும், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக மருத்துவப் படிப்பையே தொடர முடியாத சூழ்நிலையும் மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சிகால உதவித் தொகை குறித்த விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களும் இது தொடர்பாக விரிவான பேட்டி ஒன்றினை ஜூலை 29 அன்று அளித்திருந்தார்கள். இந்தப் பேட்டி அளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்தக் கோப்பிற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை என்றும், இதற்கான கோப்பு நிதித் துறையில் நிலுவையில் உள்ளதாகவும், பிற மாநிலங்களில் உள்ள அயல்நாட்டு மருத்துவ மாணவர்கள் எல்லாம் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மேற்படி பயிற்சி காலதாமதப்படுத்தப்படுவது தங்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பயிற்சி உடனடியாக துவங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அயல்நாட்டு மருத்துவ மாணவ, மாணவியரிடையே இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் Foreign Medical Graduation Examination-ல் தேர்ச்சி பெற்றுவிட்டு, இரண்டு ஆண்டு பயிற்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அயல் நாடுகளில் மருத்துவம் பயின்று பயிற்சிக்காக காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழையெளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் என்பதையும், அவர்களின் மருத்துவப் படிப்பு ஏற்கெனவே காலதாமதமாகி விட்டது. முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, நிதித் துறையில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அவர்களுக்கான மருத்துவப் பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

140 காலியிடங்கள்.. தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்...!

Sun Oct 2 , 2022
HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Supervisor manager, Trainor Tellicoling counselor, Helper, security guard பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 140 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like