fbpx

CM Stalin: “கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும்” மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

TN 10th result 2024 : இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன்படி 91.55% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 94.53 சதவீத மாணவிகள், 88.58 சதவீத மாணவர்கள் ஆகும். இந்த முறையும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.95% தேர்ச்சி சதவீதம் அதிகம். இந்த தேர்வில் பாடம் வாரியாக தேர்ச்சி விகிதத்தில், தமிழில் 96.85 %, ஆங்கிலம் – 99.15%, கணிதம் – 96.78 %, அறிவியல் – 96.72 %, சமூக அறிவியல் – 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், ” மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

மாணவச் செல்வங்களே… உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி – தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட, நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.

READ MORE: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதா மாணவர்கள் நாளை முதல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Kathir

Next Post

JOB | மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Fri May 10 , 2024
ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support-III பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – ICMR NIRRCH பணியின் பெயர் – Project Technical Support-III விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2024 விண்ணப்பிக்கும் முறை – Interview காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள […]

You May Like