fbpx

முதல்வர் மருந்தகம்..!! ரூ.3 லட்சம் அரசு மானியம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகம் அமைக்கலாம்.

இதற்காக www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஒப்புதல் வழங்கப்படும்.

விதிமுறைகள்

முதல்வர் மருந்தகம் அமைக்க 110 சதுரஅடிக்குக் குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.

சொந்த இடம் இருந்தால், அதற்கான சொத்துவரி ரசீது அல்லது குடிநீர்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது இருக்க வேண்டும்.

வாடகை இடம் என்றால், இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

ரூ.3 லட்சம் மானியம்

முதல்வர் மருந்தகம் அமைப்போருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்பட்டால், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும்.

பிறகு ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு, இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும்.

விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read More : பிப்.10ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!! பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..?

English Summary

It has been announced that applications can be made online through the website to set up a Chief Minister’s Dispensary in Chennai.

Chella

Next Post

கல்விக் கடன் ரத்து... சாதி பாகுபாடைத் தூண்டும் விதமாக செயல்படும் திமுக...! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு...!

Tue Feb 4 , 2025
Waiver of education loans... DMK is acting in a way that incites caste discrimination

You May Like