fbpx

கண்டதும் வந்த கள்ளக்காதல் முறை தவறிய உறவில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…..! கணவனுக்கு பயந்து இளம் பெண் செய்த பயங்கர செயல்…..!

சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசித்து வந்த சங்கீதா (26) என்ற இளம் பெண்ணின் குழந்தை தான் ஏரியில் இறந்து கிடந்த குழந்தை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

சங்கீதாவுக்கு திருமணம் ஆகி கார்த்திக் என்ற கணவரும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையின் இருக்கின்றனர். வறுமையின் காரணமாக, ஒரு பெண் குழந்தை போதும் என்று தம்பதிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் என்ற விபரமும் தெரிய வந்துள்ளது. இதற்கு நடுவே சங்கீதாவுக்கும், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நபர் ஒருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் சங்கீதா கர்ப்பம் அடைந்துள்ளார். ஆகவே சங்கீதாவின் வயிறு பெரிதாகி வருவதை கண்ட அவரது கணவர் இது பற்றி கேட்டபோது சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கலந்த இரண்டாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சங்கீதாவுக்கு திடீரென்று பிரசவலி ஏற்பட்டுள்ளது. ஆகவே வீட்டு குளியல் அறையிலேயே தன்னிச்சையாக அந்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் பிறகு கணவருக்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சினை உண்டாகும் என்பதால், அந்த குழந்தையை அருகில் இருந்த ஏரியில் வீசிவிட்டு சங்கீதா வீட்டிற்கு வந்து விட்டார் என்ற விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, காதலர்கள் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

மனைவியின் நடத்தையில் சந்தேகமா…..! தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் மாயம் திருச்சி அருகே பயங்கரம்…..!

Wed Jul 5 , 2023
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவரது மனைவி சபுராபீவி என்கின்ற நிஷா (35) இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் சதீஷ்குமார் தன்னுடைய மனைவி […]

You May Like