கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து, பதறிப்போன தாயார் மகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் அந்த சிறுமியிடம் விசாரித்த போது அழுது கொண்டே ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார். அதாவது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்வது கர்ப்பம் அடைந்ததாக கூறியதால் சிறுமியின் தாயார் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் ஆகவே இந்த புகாரியின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.