fbpx

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.! கைது செய்யக்கோரிய எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்.!

உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாகிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்ராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் ராவத் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியான கமல் ராவத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த சம்பவம் உத்ராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் தொகுதியில் நடந்திருப்பதால் எதிர்க்கட்சிகள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

எனக்கே விபூதி அடிக்க பாத்தியா.! மாமியாருடன் கள்ள உறவு.! மருமகனை தீர்த்துக் கட்டிய மாமனார்.!

Sat Dec 30 , 2023
மாமியாருடன் தகாத உறவிலிருந்து மருமகன் கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகமாடிய மாமனாரை கைது செய்து விசாரித்ததில் அவரிடமிருந்து பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபக்கீரப்பா. இவர் தனது மகளின் கணவரான ரோகக் கண்ணாவர் என்பவருடன் பைக்கில் செல்லும் போது விபத்து நடந்து தனது மருமகன் உயிரிழந்ததாக காவல்துறையில் புகார் […]

You May Like