fbpx

’பசங்க’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மனோன்மணி..!! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மனோன்மணி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தில் நடிகர் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்திருப்பார்கள்.

பாண்டிராஜின் பசங்க படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்றே சொல்லலாம். அந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும், சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த படத்தில் 4 சிறுவர்கள் அவர்களின் வாழ்வியல், நண்பர்கள், கல்வி, யதார்த்தமான பள்ளி செல்லும் பருவத்தை தனது சிறப்பான இயக்கத்தில் மக்கள் மனதில் அழகாக பதியச்செய்திருப்பார் பாண்டிராஜ். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் விமலும் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், இந்த படத்தில் மனோன்மணி கதாபாத்திரத்தில் நடித்த தாரிணி கொம்பன் படத்தில் லட்சுமி மேனனுடன் நடித்திருப்பார். இவரின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : இரவில் ஜொலித்த ஈசிஆர் கடற்கரை..!! அன்புமணி பகிர்ந்த அலைகள் வீடியோ..!!

English Summary

Do you know how Manonmani, who acted as a child star in the movie Basanga, is doing now?

Chella

Next Post

BIG BREAKING | தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sat Oct 19 , 2024
Tamil Nadu government has ordered to declare November 1st as a public holiday in view of Diwali festival.

You May Like