திருப்பூர் மாவட்டத்தில் ஈவு இரக்கமின்றி குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் ஆரோக்கியசாமி (வயது 24). இவருடன் ஒரே வீட்டில் வாசித்து வந்த பெண்மணி பிரியா (வயது 21). கடந்த மார்ச் 28ம் தேதி பிரியாவின் குழந்தை வீட்டில் மயங்கி இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அதன் மரணத்தை உறுதி செய்துள்ளனர். பின் தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை மிதித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரியா மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிதரும் உண்மை அம்பலமானது. ஆரோக்கியசாமி – பிரியா இருவரும் காதல் வயப்பட்டு இருக்கின்றனர். இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருதரப்பு பெற்றோர், இருவருக்கும் வெவ்வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
விருப்பமில்லாத குடும்ப வாழ்க்கையை விரக்தியுடன் வாழ்ந்து வந்த இருவரும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி திருப்பூரில் வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். அங்கு பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு பிரியாவின் குழந்தை இடையூறாக இருந்துள்ளது.
அவ்வப்போது குழந்தை அழும்போது பிரியா குழந்தையை கவனிக்க செல்வதால், அது ஆரோக்கியசாமிக்கு ஆத்திரத்தை தந்துள்ளது. இதனால் ஆரோக்கியசாமி குழந்தையை சம்பவத்தன்று மிதித்து கொலை செய்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ஆரோக்கியசாமி மற்றும் பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.