பல ஆண்டுகளாக குழந்தையில்லாததால், மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஸ்ரீதர் ராய் ரோடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய் இருக்கிறார். இதையடுத்து சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அடுக்குமாடி வீடு ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் இருந்து சிறுமியின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அலோக் குமார் என்பவர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தனக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மந்திரவாதி ஒருவரின் அறிவுறுத்தலின்படி 7 வயதுப் சிறுமியை பலி கொடுத்ததாக போலீசாரிடம் அலோக் குமார் தெரிவித்துள்ளார். அதாவது தனது மனைவிக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், அவர் மந்திரவாதியை அணுகியதாகவும், நரபலி கொடுத்தால் பிரச்னை தீரும் என அவர் கூறியதையடுத்து இவ்வாறு செய்தாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.