fbpx

கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைத்த சீனா..!! மீண்டும் ஆபத்தா..? உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

கொரோனா விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவின் மாறுபட்ட ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சில கருத்துகளை பகிர்ந்துள்ளது. அதில், ஒரு புதிய துணை கொரோனா மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் ‘தீவிர வெளிப்படைத்தன்மையை’ பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், அதே வேளையில், அதன் பாதிப்பை அறியாமல் கொரோனா தாக்கம் குறித்த கூடுதல் தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், ‘சீனாவில் இறப்புகள் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக WHO இன்னும் நம்புகிறது’ என்று தெரிவித்தார்.

கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைத்த சீனா..!! மீண்டும் ஆபத்தா..? உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

புதிய Omicron துணை மாறுபாடு XBB.1.5 வேகமாகப் பரவி வரும் நிலையில், யுனைடெட் ஸ்டேட்ஸ் அதாவது அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பை சிறப்பாக இருப்பதாகவும் , ‘தரவு மற்றும் அந்தத் தரவின் தாக்கம் தொடர்பாக WHO உடன் இணைந்து பணியாற்றுவதில், அமெரிக்காவின் சார்பாக தீவிர வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் பாராட்டினார். Omicron துணை மாறுபாடு XBB.1.5 பற்றி இதுவரை கிடைத்திருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் பார்க்கும் போது, இது மிகவும் பரவக்கூடிய ஒரு வடிவமாகவே பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

சாதாரண மெயில்தானே என நினைத்த ஊழியர்கள்..!! ரூ.2.61 கோடி அபேஸ்..!! கூட்டுறவு வங்கிக் கணக்கு ஹேக்..!!

Thu Jan 12 , 2023
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தின் கணக்கை ஹேக் செய்து ரூ.2.61 கோடி பணத்தை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கடந்த நவம்பர் மாதம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.61 கோடி திடீரென மாயமானது. பின்னர், அவை ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. வங்கிக்கு மெயில் மூலம் ஒரு லிங்கை நைஜீரிய ஹேக்கர்கள் அனுப்பி உள்ளனர். இதைப் பார்த்த […]
சாதாரண மெயில்தானே என நினைத்த ஊழியர்கள்..!! ரூ.2.61 கோடி அபேஸ்..!! கூட்டுறவு வங்கிக் கணக்கு ஹேக்..!!

You May Like