கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டதுடன், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக்கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.