fbpx

14 போர் கப்பல்கள் 7 விமானங்களை அனுப்பிய சீனா!. தைவான் எல்லையில் பதற்றம்!

China: தன்னாட்சி நாட்டுக்கு எதிராக தைவான் எல்லையில், போர் கப்பல்கள், ராணுவ விமானங்களை சீனா அதிகளவில் அனுப்பி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது. இதை ஏற்க மறுத்து தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது. போர் கப்பல்கள், ராணுவ விமானங்களை தைவான் எல்லைக்கு அனுப்பி சீனா அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “கடந்த சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தைவான் எல்லையில் சீனாவின் 14 போர் கப்பல்கள், 7 ராணுவ விமானங்கள் மற்றும் 4 பலூன்கள் சுற்றி வந்துள்ளன. இதில் ஏற்கனவே 8 போர் கப்பல்கள் இருந்த நிலையில் அது தற்போது 14ஆக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ஷாக்!. 8வது ஊதியக் குழு அமைக்கப்படாது?. புதிய வழிமுறை அறிமுகம்!. மத்திய அரசு திட்டம்!.

Kokila

Next Post

கிராமப்புற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000..!! யாரெல்லாம் இணையலாம்..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!!

Mon Dec 9 , 2024
The central government has launched a scheme called Bima Sakhi Yojana for the economic empowerment of women.

You May Like