பதவி உயர்வு கொடுக்கவில்லை என தனது முதலாளியையும் அவரது குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற நபரை 8 ஆண்டுகள் கழித்து அமெரிக்க போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த 2014ல் ஜனவரி 30ம் தேதி சம்பவம் நடந்தது. மோய்யி சன் (50), மேக்சி சன் (49) , டிமோதி சன் (9) டைடஸ் சன் (7) ஆகிய நான்கு பேரும் அவர்களின் வீட்டில் தனித்தனி அறைகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த நிலையில் கிடந்தார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது இநநிலையில் சீனாவைச் சேர்ந்த ஃபங்லு என்பவர் செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தற்போதுதான் இந்த தகவல் வெளிவந்ததாக பத்திரிகைகளில் தற்போது வைரலாகியது.
தனது மேலதிகாரியான மோய்யி தன்னை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்காததால் இந்த கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் சீனாவைச் சேர்ந்த குற்றவாளி. அதன்படி ஃபங் பணியாற்றி வந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டு பதவி உயர்வு கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தார் . மோயியிடம் தன்னைப்பற்றி நல்லவிதமாக கூறும்படியும் கேட்டிருந்தார் என போலீஸ் தெரிவித்தது.
இந்நிலையில் அலுவலகத்தில் ஃபங் லூவிடம் சக ஊழியர்கள் சரியாக நடந்து கொள்ளாததை கவனித்து மோயிதான் தன்னைப் பற்றி ஏதோ கூறியிருக்க வேண்டும் என நினைத்திருக்கின்றார். இதனால் தான் தனக்கு பதவி உயர்வு பரிபோனது என நினைத்து தகராறு செய்துள்ளார். இதை அவர் தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்காக துப்பாக்கி வாங்கியதாகவும் அவர் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தான் கொலை செய்யவில்லை என கூறி வந்த ஃபங் சீனாவுக்கு சென்றுவிட்டார். பல ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 11ல் மீண்டும் அமெரிக்கா வந்துள்ளார். இதனிடையே அமெரிக்க போலீஸ் துப்பு துலக்கி ஃபங்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா வந்த அவரை அந்நாட்டு போலீஸ் கைது செய்தது.