சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, 12ஆம் தேதிகளில் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில், மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மேலும், இந்த கோயில் தமிழக – கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இந்த திருவிழாவுக்கு இரு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான திருவிழா மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, திருவிழா நடைபெறும் அன்றைய தினம் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதேபோல், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 9ஆம் தேதி நடைபெறதால், அன்றைய தினமும் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.