மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ www.cityfinance.in/rankings, என்ற வலைத்தளத்தில் மார்ச் 20,2023 முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக பங்கேற்க முடியும். ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ தொடங்கப்பட்டு இருப்பதன் முக்கிய நோக்கம், நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை சீராய்வு செய்யும் நடவடிக்கையாகும்.
இதன் வழிகாட்டுதல்களின் கீழ், கடந்த டிசம்பர் 28, 2022 அன்று, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை 15 முக்கிய அம்சங்களின் கீழ் சீராய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.