பிரபல சமூக ஆர்வலரான சுலோச்சனா ராமசேஷன் காலமானார்.
சென்னையில் உள்ள எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் தொடர்புடைய பிரபல சமூக ஆர்வலரான சுலோச்சனா ராமசேஷன், கனடாவின் டொராண்டோவில் உள்ள தனது மகள் வீட்டில் காலமானார். அவருக்கு வயது 89. பரவலாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பசுமை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏழைகளுக்கான நலன்புரி நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வுக்காக எக்ஸ்னோரா மூலம் ஆதரவைத் திரட்டி, சென்னையில் உள்ள குடிமை இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர்.
மிகவும் ஆற்றல் மிக்கவராகவும், விட்டுக்கொடுக்காத மனப்பான்மை கொண்டவராகவும் இருந்த திருமதி சுலோச்சனா ராமசேஷன் 25 ஆண்டுகள் எக்ஸ்னோரா தலைவராக இருந்தார். நேற்று மாலை 5 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. தொண்டு மற்றும் கல்வி சேவைக்கு பெயர் பெற்ற ராமசேஷ ஐயரின் புகழ்பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆல் இந்தியா ரேடியோவின் மூத்த செய்தி வாசிப்பாளரான அவரது இளைய சகோதரி சரோஜ் நாராயண்சுவாமி ஆகஸ்ட் மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.