fbpx

Chennai: 6 மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு!…. அதிகாரப்பூர்வ தகவல்!

Chennai: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் 6 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அங்கே சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் அளிக்கிறார்கள். இந்த நிலையில், பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாத் ஈர்யா சென்னை மேற்கொண்டு வரும் ரயில்வே திட்ட பணிகள் குறித்து விளக்கினார். அப்போது அவர், “அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அதில் ஏற்கனவே 8 ரயில் நிலையங்களின் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வரும் நிலையில், மற்ற 7 ரயில் நிலையங்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

இத்திட்டத்தில் முதலில் 15 ரயில் நிலையங்கள் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதில் இப்போது திரிசூலம் மற்ற குரோம்பேட்டை ரயில் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இருக்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் கூழ் இந்த ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

மேலும், பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான ரயில்களில் கூடுதலாக 5 ரயில்களைக் கூடுதலாக கூடுவாஞ்சேரி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம். பீக் ஹவர் எனப்படும் பொதுமக்கள் பணிக்குச் செல்லும் காலை மற்றும் மாலை வேலையில் இரண்டு மார்க்கத்திலும் தலா 5 ரயில்கள் என மொத்தம் 10 ரயில்களை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம். நாளை மறுநாள் அதாவது திங்கள்கிழமை முதலே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை அதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அங்கே அடுத்த 6 மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். மேலும், வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தற்போதுள்ள நிலத்தைக் காட்டிலும் அதிக நிலம் தேவைப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்குப் பிறகு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும்” என்றார்.

Readmore:ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு வேலை வழங்கப்படும்!… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

Kokila

Next Post

surrogate mother: இனி வாடகைத்தாய் முறையை பயன்படுத்த நிபந்தனை!... கணவன் - மனைவிகளுக்கு புதிய விதிமுறை!

Sat Feb 24 , 2024
surrogate mother: கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் விதிமுறைகள், 2022-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், அவற்றில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை […]

You May Like