தமிழகத்தில் வரும் 4-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நாளை 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் பொழுது சட்ட ஒழுங்கு குறித்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய அவர்; ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மோதல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். சென்னையில் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.