fbpx

கவனம்…! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்…! உடனே இதை செய்து முடிக்கவும்…!

செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத 10-ம் வகுப்பு மாணவர்கள், நாளை மாலை வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், நாளை மாலை வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்த பின்னர், ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

வந்தது அதிரடி உத்தரவு...! 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை....! மீறினால் நடவடிக்கை உறுதி...!

Thu Dec 29 , 2022
குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 01, 2023 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை இடைநிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, 2023 ஜனவரி 1 வரை அனைத்து வாரியங்களின் […]

You May Like