fbpx

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! 16 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளது காவல்துறை. நாகர்கோவில் ஆசாரிப்புள்ளத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் 6 வயது சிறுமி  தாயும் தந்தையும் கூலி வேலைக்கு செல்வதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த 16 வயதுடைய இளைஞன் ஒருவன் அந்த சிறுவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அந்தச் சிறுமி தனது தாயார் வேலை முடித்து வந்ததும் அவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  உடனடியாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட  மாணவனை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது விசாரணையில் மாணவன்  அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அந்தப் பதினொன்றாம் வகுப்பு மாணவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை  சிறையில் அடைத்தது. பின்னர் அந்த மாணவர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவம்  அப்பகுதியில் பணிக்கு செல்லும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் போது  பக்கத்தில் இருக்கக்கூடியவர்களால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள்  தங்களது குழந்தைகளுக்கும் நிகழுமா என பெற்றோர் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கென புகார் அளிக்க காவல்துறையில் தனி தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் இதுபோன்று தொந்தரவுகள் இருந்தால் அந்தந்த மாவட்டத்திற்கான அவசர எண்ணை அழைத்து  இது தொடர்பாக புகாரை தெரிவிக்கலாம் எனவும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு  விரைவாகவும் எடுக்கப்படும் என  காவல்துறை

உறுதியளித்திருக்கிறது.

Rupa

Next Post

நலம் தரும் இயற்கை சாம்பிராணி!... எத்தனை அதிசயங்கள் தெரியுமா?...

Fri Feb 10 , 2023
கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும், கிருமிகளை அழிக்கும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள இயற்கையான சாம்பிராணி பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம். இயற்கையாக மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிகளை பயன்படுத்தி வந்தால், தீய சக்திகள் அண்டாது, நுண் கிருமிகளை அழிக்கும், மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொடர்ந்து இறைவனுக்கு சாம்பிராணி […]

You May Like