fbpx

ரெடியா…? 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு…! தீவிரமாக கண்காணிக்க உத்தரவு…!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 4, 10, 308 மாணவர்களும், 4, 41, 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8, 51, 482 பேர் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3, 67, 535 மாணவர்களும், 4, 20, 242 மாணவிகளும், 6 திருநங்கை என 7, 87, 783 பேர் மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரையில் எழுத உள்ளனர்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்போது, வேறு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு.. இந்த விதிகள் எல்லாம் இன்று முதல் மாறப்போகிறது..

Wed Mar 1 , 2023
ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் இன்று முதல் (மார்ச் 1), பல புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. அது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கலாம். மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய மாற்றங்களைக் காணலாம். அதே நேரத்தில், ரயில் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். எனவே, மார்ச் மாதத்தில் எந்தெந்த […]
ஜனவரி

You May Like