fbpx

’வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது’..!! ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1, 2, 3ஆம் வகுப்புகளுடன் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும்.

அதேசமயம் மூன்று முதல் நான்கு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் இருந்தால் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்த வேண்டும் எனவும் இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சூப்பர்..!! அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வீடியோக்களை இனி இலவசமாக பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Mon Jun 19 , 2023
அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரும் நிலை தான் தற்போதைக்கு இந்தியாவில் இருந்து வருகிறது. அதேநேரம் நீங்கள் இலவசமாக இந்த ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நபர்கள் போஸ்ட்பெய்டு திட்டத்தில் இணையும் […]

You May Like