fbpx

பருவநிலை மாற்றம்!. இந்தியாவில் வெப்பம், நோய்ப்பரவல் அதிகரிக்கும்!. WHO விஞ்ஞானி எச்சரிக்கை!

WHO Warning: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் அதிக வெப்பத்திற்கும் , நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உருவாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜர்பைஜானில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கிய 29-வது ஐ.நா. பருவநிலை (சிஓபி29) மாநாடு 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.அதில், பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள எல்லாருமே அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள எல்லாருமே அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உள்ளது. எனவே, தூய்மை எரிசக்திக்கு ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்பதே முன்னுரிமையாக உள்ளது. இது, உள்புறக் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை மட்டும் குறைக்காது. இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது நீடித்த நிலைத்தன்மைக்கான முக்கிய படி.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை. காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவது முதல் வேளாண்மை சுழற்சி பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வரையிலான பாதிப்புகள் அவை என தெரிவித்துள்ளார்.

Readmore: ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!. ரசிகர்கள் வாழ்த்து!

English Summary

Climate change! Heat in India, disease will increase! WHO scientist warning!

Kokila

Next Post

புரோ கபடி லீக் 2024!. இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?. பெங்கால் வாரியஸ் - தமிழ் தலைவாஸ் பலப்பரீட்சை!.

Sat Nov 16 , 2024
Pro Kabaddi League 2024!. Who will win today's match? Bengal Warriors - Tamil Thalaivas Multiple Exam!.

You May Like