Climate change: காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பூஞ்சை தொற்றுகள் பரவுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
உலக வெப்பநிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருவதால் இந்த சூழல் பூஞ்சைகள் செழித்து வளர்வதற்கு ஏதுவாக அமைகிறது. மேலும் தற்போதைய காலநிலை மாற்றமானது புதிய பூஞ்சை நுண்ணுயிரிகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைவதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் காலநிலை மாற்றம் காரணமாக தீவிரமடையும் இயற்கை சீற்றங்களின் பொழுது பூஞ்சை நோய்கள் எளிதில் தூண்டப்பட்டு பரவுகின்றன. இதனால் சமூக ரீதியாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த மோசமான உலகளாவிய பிரச்சனை குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளை மட்டுமல்லாமல், அதிக வருமானம் ஈட்டும் நாடுகளையும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும். ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த காலநிலை மாற்றத்திற்கு நாம் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அதனால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனை தடுக்கவும், ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் இது சம்மந்தமான மேம்படுத்தப்பட்ட புரிதல் உதவியாக இருக்கும். இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு புரிதல் உண்டாக்கப்பட வேண்டும்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்: உலக வெப்பமயமாதல் இருவடிவ பூஞ்சைகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை கொண்டுள்ளது. உலக வெப்பமயமாதல் சூழலில் உள்ள வெப்ப அழுத்தத்திற்கு பூஞ்சைகளின் எதிர்ப்பு திறன். அதிக வெப்ப நிலையில் வாழும் மனித பூஞ்சை நுண்ணுயிரிகள் மற்றும் ஆதார உயிரி ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பு. பூஞ்சைகளில் உள்ள வெப்பத் தழுவலின் ஜெனிடிக்ஸ் மற்றும் எபிஜெனிடிக்ஸ். உலக வெப்பமயமாதல், பறவைகள் இடம்பெயர்வு ஆகியவற்றிற்கு பூஞ்சை தொற்று உடன் உள்ள தொடர்பு.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலமாக காலநிலை மாற்றத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைப்பது மற்றும் உலக வெப்பநிலை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது போன்றவை இதில் அடங்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அல்லது இயற்கை சீற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்து அங்கு பூஞ்சை தொற்று பரவாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக மேலும் ஆய்வுகள், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிக முக்கியம்.
Readmore: இல்லத்தரசிகளே!. இன்று ஆடி வெள்ளி!. இந்த வளையல் அணிந்து வழிபட்டால் எவ்வித கஷ்டமும் தீரும்!