செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்த காதலியை, சமாதானம் செய்ய உடன் சென்ற காதலனும், காதலியும் 150 அடி உயரத்தில் சண்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், அந்த இளம் பெண், தன்னுடைய காதலனின் வீட்டிற்கு சென்று, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அந்த காதல் ஜோடிக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தன்னுடைய காதலனின் நடவடிக்கை அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போனதாக சொல்லப்படுகிறது.
ஆகவே , ஆத்திரம் கொண்ட காதலி, அருகில் இருந்த 150 அடி உயரம் கொண்ட மின்கோபுரத்தில், ஏறி இருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய காதலன், மின் கோபுரத்தில், ஏறி, காதலி எந்த விதமான விபரீத முடிவும் மேற்கொண்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, அவர பின்னாலேயே ஏறியுள்ளார். அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்தவரே காதலியின் பின்னால் சென்றுள்ளார் காதலர்.
இது பற்றிய தகவலை அறிந்து கொண்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, காதல் ஜோடி இருவரும் 150 அடி உயரத்தில் இருந்தவாறு சண்டை போட்டுக் கொண்டதை அதிர்ச்சியுடன் பார்த்தனர.
அதன் பிறகு, காவல்துறையினர் காதலர்கள் இருவரையும், உங்களுக்கு சண்டை போட வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று, சரமாரியாக திட்டி தீர்த்து விட்டனர். பிறகு இருவரையும் கீழே இறங்கி வருமாறு, காவல்துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் சுமார் அரை மணி நேரம் அந்த காதல் ஜோடிகள் கீழே இறங்கவில்லை. அதன் பிறகு, காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்ட அந்த காதல் ஜோடி, கீழே இறங்கியது. இறங்கியவுடன், காதலன் அந்த இடத்திலிருந்து, தப்பி சென்று விட்டார். பின்பு காதலியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.