குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார் அதன் பிறகு பாய்ந்தோடி சென்ற காவிரி நீரை மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இதில் நீர் வளத்துறை அமைச்சர் துறைமுருகன், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு உள்ளிட்டோரும் பங்கேற்று மலர் தூதி காவிரி நீரை வரவேற்றனர்.
இதனை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி நீரை திறம்பட பயன்படுத்த சாகுபடி விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குருவை சாகுபடிக்கு தேவையான இடுப்பொருட்கள் தயார் நிலையில் இருக்கின்றன. கோடை மழை காரணமாக, டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. கால்வாய் தோறும் பணிகளுக்காக 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் டெல்டாவில் இதுவரையில் 1. 06 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது குருவை நெல் சாகுபடி திட்டம் ரூபாய் 75.98 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின், 2.5 லட்சம் ஏக்கருக்கான ரசாயன உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு 1.24 லட்சம் ஏக்கருக்கான நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.