fbpx

டிரக் மீது CNG டேங்கர் மோதி கோர விபத்து!. 40 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்!. 5 பேர் பலி!. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!.

Accident: ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில்அருகே டிரக் மீது சிஎன்ஜி டேங்கர் மோதி தீப்பிடித்ததில் அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் 5 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பெட்ரோல் பம்ப் அருகே டிரக் மீது CNG டேங்கர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்த 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பரவி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்கள் பார்வையிட்டார்.

Readmore: அதிகரிக்கும் டெங்கு!. டெல்லியில் மேலும் 3 பேர் உயிரிழப்பு!. 6,163 பேர் பாதிப்பு!.

Kokila

Next Post

இந்தியாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பீதி!. நெல்லூரில் 6 வயது சிறுவன் பாதிப்பு!. சென்னையில் சிகிச்சை!

Fri Dec 20 , 2024
Zika virus: ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 6 வயது சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜிகா வைரஸ் சந்தேகத்தின்பேரில் சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் இந்தியாவில் அவ்வப்போது பரவிவருகிறது. அதன்படி, தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் மரிபாடு மண்டலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். […]

You May Like