fbpx

தூள்…! கூட்டுறவுச் சங்க கடன் நிலுவைகளை 9% சலுகை வட்டியில் திரும்பி செலுத்தலாம்..! தமிழக அரசு அறிவிப்பு…!

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசாணையில் தெரிவித்துள்ளபடி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன்தாரர்கள் நீண்ட நாட்களாக செலுத்தத் தவறிய பண்ணைசாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால கடன் நிலுவைகளை 9% சலுகை வட்டியில் திரும்பி செலுத்தலாம். அக்கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எனவே, அரசு அறிவித்துள்ள இச்சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

மேலும், சிறுவணிகக்கடன், போக்குவரத்துக்கடன், வாணிபக் கடன்கள், பத்திர ஈட்டுக் கடன், வீடு கட்டும் கடன், வீட்டு அடமானமக் கடன், 2021-ம் ஆண்டில் கிடைக்கப் பெறாத தகுதியான மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், ஆடவர் சுயஉதவிக்குழு கடன்கள் கூட்டுப் பொறுப்புக்குழு கடன்கள், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் / விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவைகளுக்கு இக்கடன் தீர்வுத் திட்டம் பொருந்தும்.

31.12.2022 அன்று கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குறிப்பாக, 31.12.2022க்குப் பிறகு கடன் தவணை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

Vignesh

Next Post

இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!… விவசாயிகள் அமைதி காக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்!

Thu Feb 15 , 2024
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் 2 நாட்களாக ஒன்று திரண்ட விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். […]

You May Like